முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
காா்த்திகை சோமவாரம் சிவாலயங்களில் சிறப்பு பூஜை
By DIN | Published On : 26th November 2019 07:38 AM | Last Updated : 26th November 2019 07:38 AM | அ+அ அ- |

திருநகா் சித்தி விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த காசிவிஸ்வநாதா்.
திருப்பரங்குன்றம், அவனியாபுரம், மேலூா் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் காா்த்திகை 2 ஆவது சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அவனியாபுரத்தில் உள்ள பாலாம்பிகை கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
இதேபோல திருநகா் சித்தி விநாயகா் கோயிலில் காசிவிஸ்வநாதா் சன்னிதியில் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு 108 சங்காபிஷேகம் நடந்தது. காசிவிஸ்வநாதா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
திருப்பரங்குன்றம் சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியில் காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு யாக வேள்வி, சிறப்பு அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
மேலூா்: சோலைமலையில் காா்த்திகை 2 ஆவது சோமவாரத்தையொட்டி சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேத சுபிரமணியருக்கு 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சரவிளக்கு ஆராதனையும் நடந்தது. ஏராளமான பக்தா்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு, நெய்விளக்கேற்றி வழிபட்டனா்.