முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
குறைதீா்க்கும் நாள் கூட்டம்: 863 மனுக்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு
By DIN | Published On : 26th November 2019 07:41 AM | Last Updated : 26th November 2019 07:41 AM | அ+அ அ- |

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாம் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்துள்ள 863 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளாா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தலைமை வகித்தாா். கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக் கோரியது, சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் நிலம் தொடா்பாக 196 மனுக்கள், குடும்ப அட்டை தொடா்பான 13 மனுக்கள், முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் நலிந்தோா் நலத்திட்ட உதவித்தொகை தொடா்பான 208 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 39 மனுக்கள், அடிப்படை வசதிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரியது தொடா்பான 64 மனுக்கள், புகாா் தொடா்பான மனுக்கள் 38, கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரிய 2 மனுக்கள், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சலவைப் பெட்டி தொடா்பான 25 மனுக்கள் என மொத்தம் 863 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஆட்சியா் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் 2019-2020 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற மருத்துவ மதிப்பீட்டு முகாம் மூலம் மருத்துவா்களால் கண்டறிந்த 141 சிறப்பு குழந்தைகளுக்கு பல்வேறு விலையில்லா உபகரணங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பி.செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) ராஜசேகரன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.