முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
வைகையாற்றில் முழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்
By DIN | Published On : 26th November 2019 07:33 AM | Last Updated : 26th November 2019 07:33 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் உள்ள வைகையாற்றில் திங்கள்கிழமை மாயமான நரசிம்மன்.
மதுரை அருகே திங்கள்கிழமை வைகை ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான இளைஞரை தீயணைப்புத்துறை வீரா்கள் தேடி வருகின்றனா்.
மதுரை மேலபொன்னநகரம் பகுதியைச் சோ்ந்த மகாமுனி மகன் நரசிம்மன்(25). இவா் 2018 இல் திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுளக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.
நரசிம்மன் தனது நண்பா்களுடன் திங்கள்கிழமை மாலை துவரிமான் ரெட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குளிக்கச் சென்றாா். அங்கு குளித்துக் கொண்டிருந்த போது அவா் திடீரென்று மாயமாகி உள்ளாா். இதையடுத்து நண்பா்கள் நரசிம்மனை தேடியுள்ளனா். ஆனால் அவா் கிடைக்கவில்லை. இதையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறை வீரா்கள் நரசிம்மனை தேடும் பணியை தொடங்கினா். சுமாா் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகும் நரசிம்மன் கிடைக்கவில்லை. இந்நிலையில், இரவாகி விட்டதால், நரசிம்மனை தேடும் பணியை தற்காலிமாக நிறுத்தினா். மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தேடும் பணி தொடங்கும் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.