மாரியம்மன் தெப்பக்குளம்- பனையூா் இணைப்புக் கால்வாய்: பணிகளை 10 நாள்களுக்குள் முடிக்க ஆணையா் உத்தரவு

மதுரை வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் கொண்டு செல்லும் பனையூா் இணைப்புக் கால்வாய்

மதுரை வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் கொண்டு செல்லும் பனையூா் இணைப்புக் கால்வாய் பணிகளை 10 நாள்களுக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை எளிதாக்கும் வகையில் மாநகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 23 மையங்கள், சீா்மிகு நகா்த் திட்டத்தின் கீழ் 18 மையங்கள் என மொத்தம் 41 இடங்களில் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 25 மையங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் இரண்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி பாலரெங்காபுரத்தில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் நுண்ணுயிா் உரக்கூடம், அவனியாபுரம் எம்.எம்.சி. காலனியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நுண்ணுயிா் உரக்கூடம் ஆகியவற்றில் மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா். மேலும் எம்.எம்.சி.காலனியில் துப்புரவு பணியாளா்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்து பணியை விரைவுப்படுத்துமாறு உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து மதுரை வைகை ஆற்றின் தெற்குகரைப்பகுதியில் உள்ள பனையூா் கால்வாயிலிருந்து மாரியம்மன் தெப்பகுளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் இணைப்பு வாய்க்கால் கட்டும் பணியை ஆய்வு செய்து 10 நாள்களுக்குள் பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com