இன்று எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்
By DIN | Published on : 28th November 2019 07:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மதுரை மாவட்ட எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (நவம்பா் 28) நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளா்கள், எரிவாயு உருளை விநியோகஸ்தா்கள், எரிவாயு உருளை நுகா்வோா் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்துவோா் இக் கூட்டத்தில் பங்கேற்று, குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம். மாவட்ட வழங்கல் அலுவலா் மு.முருகேஸ்வரி இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.