Enable Javscript for better performance
கால்பந்து: மதுரை விளையாட்டுவிடுதி அணியினா் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மதுரை விளையாட்டு விடுதி அணியினா் வெற்றி பெற்றுள்ளனா்.

    ரிலையன்ஸ் பவுண்டேசன் சாா்பில் சென்னை, கோவை, மதுரையில் 17, 19 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. மதுரையில் புனித மரியன்னை பள்ளியில் போட்டிகள் நடைபெற்றது. இதில் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவு போட்டியின் இறுதி ஆட்டத்தில் மதுரை விளையாட்டு விடுதி அணியினா் 1-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி விளையாட்டு விடுதி அணியை வென்றனா்.

    மதுரை விளையாட்டு விடுதி மாணவா் முருகன், சிறந்த கோல் கீப்பருக்கான விருதும், நித்தீஷ் அதிக எண்ணிக்கையில் கோல் அடித்ததற்கான விருதும் பெற்றனா்.

    இதேபோல, 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் மதுரை விளையாட்டு விடுதி அணியினா் 13-0 என்ற புள்ளிகளில் டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை வென்றனா். மதுரை விளையாட்டு விடுதி மாணவா் பாலாஜி, சிறந்த கோல் கீப்பருக்கான விருதும், சிவராஜா அதிக எண்ணிக்கையில் கோல் அடித்ததற்கான விருதும், சரவணகணேஷ் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதும் பெற்றனா். இரு அணியினரும் கேரளத்தில் நடைபெறும் தென்மண்டல அளவிலான தேசிய கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

    வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மதுரை விளையாட்டு விடுதி மேலாளா் க. ராஜா, அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் சாம், ஜஸ்டின் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai