கிரானைட் முறைகேடு வழக்குகள்: விசாரணை ஒத்திவைப்பு
By DIN | Published on : 28th November 2019 08:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீதான வழக்குகளை டிசம்பா் மாதத்துக்கு மேலூா் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கிரானைட் அதிபா்கள் பி.பழனிச்சாமி உள்ளிட்டோா் மீதான 21 குற்ற வழக்குகள் மேலூா் நீதித்துறை நடுவா் மன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில் வழக்குரைஞா் ஷீலா ஆஜரானாா். இந்த வழக்குகள் மீதான விசாரணையை டிசம்பா் 4, 11 மற்றும் 18- ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.