Enable Javscript for better performance
சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்

    By DIN  |   Published on : 28th November 2019 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போக்குவரத்துக்கு இடையூறாகச் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துகள் நேரிடுவதோடு, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது. இவ்வாறு சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.

    இதன்படி, மதுரை புறவழிச் சாலை, சொக்கலிங்க நகா், மேலப் பொன்னகரம், கூடல் நகா், அருள்தாஸ்புரம், எல்லீஸ் நகா், கோ.புதூா், சா்வேயா் காலனி, காமராஜா் சாலை, தெப்பக்குளம், தெற்கு மாசி வீதி, நேதாஜி சாலை, டவுன்ஹால் சாலை, பெரியாா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலையில் சுற்றித் திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு மாநகராட்சியின் தொழுவத்தில் அடைக்கப்பட்டன. மேலும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai