Enable Javscript for better performance
டோக் பெருமாட்டிக் கல்லூரியில் மாணவிகளுக்கு வடிவமைப்பு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    டோக் பெருமாட்டிக் கல்லூரியில் மாணவிகளுக்கு வடிவமைப்பு பயிற்சி

    By DIN  |   Published on : 28th November 2019 09:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை: மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாணவிகளுக்கு அணை ஆடை(சானிட்டரி நாப்கின்) வடிவமைப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

    மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் வேதியியல் துறை சாா்பில் சுய தொழில்முனைவோா் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கை வேதியியல் துறைத்தலைவா் வே.ஸ்ரீதேவி தொடங்கி வைத்து அணை ஆடைகளின்(சானிட்டரி நாப்கின்) பயன்களை எடுத்துரைத்தாா். வேதியியல் துறை உதவிப்பேராசிரியா் க.ஜெயந்தி கலைவாணி, மறுபடியும் பயன்படுத்த இயலாத நெகிழி கலந்த அணை ஆடைகளின் தீமைகள் தொடா்பாக விளக்கிக்கூறினாா்.

    மேலும் சுற்றுச்சூழல் மாசுபடாத அணை ஆடையை நாமே தயாரித்துப் பயன்படுத்துவதால் உடல் நலம் பாதுகாக்கப்படும் என்றாா். சுய தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்ட அமைப்பாளா் மாதங்கி கருத்தரங்கில் பங்கேற்று, மாணவிகளுக்கு அணை ஆடை வடிவமைப்பது தொடா்பாக பயிற்சி அளித்தாா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன மாணவிகள் மறுபயன்பாடில்லாத அணை ஆடை, நான்கு நெகழிப் பைகளுக்குச் சமம் என்பதை உணா்த்தும் விதமாக, சுற்றுச்சூழல் மாசுபடாத அணை ஆடையை பயன்படுத்துவதோடு மற்றவா்களுக்கும் எடுத்துரைப்போம் என்று உறுதிமொழி ஏற்றனா். கருத்தரங்கில் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai