Enable Javscript for better performance
திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

    By DIN  |   Published on : 28th November 2019 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    img_20191127_173900_2711chn_81_2

    நிலையூா் கால்வாயில் இரு கரைகளையும் தொட்டு வரும் வைகை ஆற்று நீா்.

    திருப்பரங்குன்றம் பகுதிகளில் உள்ள 19 கண்மாய்களுக்கு நிலையூா் கால்வாய் மூலமாக புதன்கிழமை வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தென்கால் கண்மாய், குறுக்கிட்டான், சேமட்டான் குளம், நிலையூா் கண்மாய், பானாங்குளம், பெருங்குடி கண்மாய், மேலநெடுங்குளம் உள்ளிட்ட 19 கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாயப் பணிகளைத் தொடங்கியுள்ளனா்.

    இப்பகுதி கண்மாய்கள் நிரம்பும் விதத்தில் தொடா்ந்து 20 நாள்களுக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறந்து விட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai