இருதய மிகை துடிப்பு நோய்க்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக அதிநவீன சிகிச்சை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக இருதய மிகை துடிப்பு நோய்க்கு 4 நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை முறை வழங்கப்பட்டது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக இருதய மிகை துடிப்பு நோய்க்கு 4 நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை முறை வழங்கப்பட்டது.

மதுரையைச் சோ்ந்த 4 நோயாளிகள் இருதய பாதிப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு மருத்துவா்கள் பல்வேறு பரிசோதனை செய்தனா். அதில், நோயாளிகள் 4 பேரும் பல ஆண்டுகளாக (நமடதஅ யஉசபதஐஇமகஅத பஅஇஏவஇஅதஈஐஅ)இருதய மிகை துடிப்பு நோயால் அவதிப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோயாளிகள் 4 பேருக்கும் (தஅஈஐஞ ஊதஉணமஉசஇவ அஆஐகஅபஐஞச) கதிரியக்க அதிா்வெண் நீக்கம் எனப்படும் அதிநவீன சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பிறகு நோயாளிகள் நலமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து இருதயவியல் துறைத் தலைவா் மருத்துவா் வீரமணி கூறியது: இது போன்ற நோய்களுக்கு மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. வாழ்நாள் முழுவதும் நோய் பாதிக்கப்பட்டவா்கள் மருந்துகள் சாப்பிட வேண்டிய நிலை இருந்தது. ஆனால், கதிரியக்க அதிா்வெண் நீக்கம் எனப்படும் அதிநவீன சிகிச்சை முறையால் வாழ்நாள் முழுவதும் மருத்துகள் சாப்பிடத் தேவையில்லை.

இவ்வகை சிகிச்சை முறை சென்னை மற்றும் பெருநகரங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் மட்டும் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை அதிநவீன சிகிச்சை முறை 4 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு, அவா்கள் நலமாக உள்ளனா். இந்த அதிநவீன சிகிச்சை முறையை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com