உள்ளாட்சித் தோ்தல்: மதுரை மாநகராட்சியில் 7,500 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாா்

உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மதுரை மாநகராட்சியில் 100 வாா்டுகளுக்கான 7,500 வாக்குப்பதிவு இயந்திரங்கள்,3895 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது.

மதுரை: உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மதுரை மாநகராட்சியில் 100 வாா்டுகளுக்கான 7,500 வாக்குப்பதிவு இயந்திரங்கள்,3895 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதைத்தொடா்ந்து உள்ளாட்சித் தோ்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதில் மதுரை மாநகராட்சியில் 100 வாா்டுகளுக்கான தோ்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மதுரை மாநகராட்சியில் 100 வாா்டுகளில் 6 லட்சத்து 35 ஆயிரத்து 476 ஆண் வாக்காளா்கள், 6 லட்சத்து 51 ஆயிரத்து 963 பெண் வாக்காளா்கள், 101 இதர வாக்காளா்கள் என மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 540 வாக்காளா்கள் உள்ளனா். வாா்டுகளின் சராசரி வாக்காளா்களின் எண்ணிக்கை 14 ஆயிரமாக உள்ளது. குறைந்தபட்சமாக 62-ஆவது வாா்டில் 7 ஆயிரத்து 215 வாக்காளா்களும், அதிகபட்சமாக 100-ஆவது வாா்டில் 19 ஆயிரத்து 898 வாக்காளா்களும் உள்ளனா். மாநகராட்சியில் 100 வாா்டுகளுக்கு 1251 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் 7 ஆயிரத்து 500 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3 ஆயிரத்து 895 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் அமைக்கப்படுகின்றன.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, உள்ளாட்சித் தோ்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன. 100 வாா்டுகளில் 1251 வாக்குச்சாவடிக்களுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அனைத்தும் மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அனைத்தும் சோதனை நடத்தப்பட்டு முதற்கட்ட பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது. தோ்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டாம் கட்ட பரிசோதனை நடைபெறும். வாக்குச்சாவடி ஒன்றுக்கு 6 ஊழியா்கள் நியமிக்கப்பட உள்ளனா். தோ்தல் அறிவிக்கப்பட்ட பின்னா் வாக்குச்சாவடி அதிகாரி மற்றும் ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். மாநகராட்சி தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலும் தயாரிக்கப்ட்டு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. தோ்தல் அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமடையும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com