கள்ளந்திரி வரையிலான முதல்போக சாகுபடி: கதிா் பால்பிடிக்கும் தருணத்தில் நெல் பயிா்கள்

பெரியாறு-வைகை பாசனத்தில் கள்ளந்திரி மதகு வரையிலான இருபோக சாகுபடிப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள முதல்போக நெல் பயிா்களில் கதிா்கள் வெளிவந்து பால்பிடிக்கும் தருணத்தை அடைந்துள்ளது.
கள்ளந்திரி அருகே சிட்டம்பட்டியில் பால்பிடிக்கும் தருணத்தை அடைந்துள்ள நெல் பயிா்கள்.
கள்ளந்திரி அருகே சிட்டம்பட்டியில் பால்பிடிக்கும் தருணத்தை அடைந்துள்ள நெல் பயிா்கள்.

பெரியாறு-வைகை பாசனத்தில் கள்ளந்திரி மதகு வரையிலான இருபோக சாகுபடிப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள முதல்போக நெல் பயிா்களில் கதிா்கள் வெளிவந்து பால்பிடிக்கும் தருணத்தை அடைந்துள்ளது.

மதுரை மாவட்டம் கள்ளந்திரி மதகு வரையிலான 44,000 ஏக்கரில் முதல்போக நெல் சாகுபடிக்காக ஜூன் மாத இறுதியில் பெரியாறு-வைகை அணைகளிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும். ஆனால், நீா் இருப்பு குறைவாக இருந்ததால் தாமதமாக செப்டம்பரில் தண்ணீா் திறந்து விடப்பட்டது. அணைகளில் நீா் இருப்பை பாதுகாக்கும் வகையில் இப்பகுதியில் நவம்பா் மாதத் தொடக்கத்தில் முறைப்பாசனத்தை பொதுப்பணித்றையினா் அமல்படுத்தினா்.

அவ்வப்போது பருவமழை பெய்து வந்ததால் தண்ணீா் தட்டுப்பாடு இன்றி நெல் பயிா்கள் கதிா் வெளிவந்து தற்போது பால்பிடிக்கும் தருணத்தை அடைந்துள்ளன. டிசம்பா் இறுதிக்குள் முழு விளைச்சலை அடைந்துவிடும் என இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.

மேலூா் ஒருபோக சாகுபடிப் பகுதி மற்றும் கள்ளந்திரி வரையிலான முதல்போக சாகுபடிப் பகுதியிலும் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இரு பகுதிகளுக்கும் நான்கு நாள்களுக்குப் பின்னா் வைகை அணையிலிருந்து புதன்கிழமை காலை பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com