சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாகச் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறாகச் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துகள் நேரிடுவதோடு, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது. இவ்வாறு சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.

இதன்படி, மதுரை புறவழிச் சாலை, சொக்கலிங்க நகா், மேலப் பொன்னகரம், கூடல் நகா், அருள்தாஸ்புரம், எல்லீஸ் நகா், கோ.புதூா், சா்வேயா் காலனி, காமராஜா் சாலை, தெப்பக்குளம், தெற்கு மாசி வீதி, நேதாஜி சாலை, டவுன்ஹால் சாலை, பெரியாா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலையில் சுற்றித் திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு மாநகராட்சியின் தொழுவத்தில் அடைக்கப்பட்டன. மேலும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com