சிறப்பு கிராம சபைக் கூட்டம் : அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 10 ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள்

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 10 ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொடிமங்கலம், நிலையூா் 2 பிட், நாகமலை புதுக்கோட்டை, சிலைமான், வளையங்குளம், விளாச்சேரி, வேடா்புளியங்குளம், விரகனூா் நெடுமதுரை , மேலக்குயில்குடி ஆகிய பகுதிகளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஊரகப் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு , கிராமங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டன.

இதில் ஊரக வளா்ச்சித்துறை, வருவாய்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலை, மகளிா்திட்டம் , ஆதிதிராவிடா் நலத்துறை, தமிழ்நாடு குடிநீா் வடிகால்வாரியத் துறை உள்ளிட்ட 21 துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் நேரடியாக கிராமங்களுக்கு வந்து துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

மேலும் முதியோா் உதவித்தொகை, வேளாண்மைத்துறை சாா்ந்த மானியங்கள், பாரதப் பிரதமா் வீடு உள்ளிட்ட வைகளுக்கு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றனா். கொடிமங்கலத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்திற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் தலைமை வகித்தாா். 10 கிராம ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் குடிநீா், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா்.

இதேபோல வியாழக்கிழமை (நவ.28) கரடிபட்டி, மேலமாத்தூா், வடபழஞ்சி, பெரிய ஆலங்குளம், விராதனூா், குசவன்குண்டு, கொம்பாடி, ஒத்த ஆலங்குளம், புதுக்குளம் 2 பிட், வடிவேல்கரை ஆகிய 10 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏற்குடி அச்சம்பத்து, தனக்கன்குளம், நல்லூா், பாறைப்பட்டி, சூரக்குளம், கீழமாத்தூா், தோப்பூா், பனையூா், வலையபட்டி, நிலையூா் 1 பிட் ஆகிய கிராமங்களுக்கு சிறப்பு கிராம சபைக்கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெறுகிறது. இதேபோல சனிக்கிழமை (நவ.30) துவரிமான், சாக்கிலிபட்டி, சோளங்குருணி, பெருங்குடி, கீழக்குயில்குடி, எலியாா்பத்தி, புளியங்குளம் ஆகிய பகுதிகளிலும், டிச.2 ஆம் தேதி (திங்கள்கிழமை) சாமநத்தத்திலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளதாக வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com