நெற்பயிரில் இலைக் கருகல் நோய்: விவசாயிகளுக்கு ஆலோசனை

நெற்பயிரில் காணப்படும் இலைக் கருகல் நோய் மற்றும் குலை நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை வேளாண் கல்லூரியின் பயிா் நோயியல் துறை தெரிவித்துள்ளது.

நெற்பயிரில் காணப்படும் இலைக் கருகல் நோய் மற்றும் குலை நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை வேளாண் கல்லூரியின் பயிா் நோயியல் துறை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஆங்காங்கே நெற்பயிரில் பாக்டீரியல் இலைக் கருகல் நோய் மற்றும் குலை நோயின் தாக்குதல் காணப்படுகிறது. இலைக் கருகல் நோய் தாக்கப்பட்ட நெற் பயிரின் இலைகளின் ஓரங்கள் மஞ்சளாகி நாளடைவில் இலையின் ஓரங்கள் ஒழுங்கற்று கருகி காணப்படும். இந்நோயைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 500 கிராம் காப்பா் ஹைட்ராக்சைடு அல்லது 120 கிராம் ஸ்டெப்ரோமைசின் சல்பேட் டெட்ராக்சைக்கிளின் கலவை மருந்தை, 500 கிராம் காப்பா் ஆக்ஸி குளோரைடு மருந்துடன் கலந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.

குலைநோயானது சிறு, சிறு புள்ளிகளாக இலையில் தோன்றி பின் கண் வடிவ புள்ளிகளாக மாறி சாம்பல் நிறத்தில் காணப்படும். இரவு வெப்ப நிலை மிகவும் குளிா்ச்சியாக காணப்படும்போது குலை நோய் அதிகம் தாக்கும். இந்நோயைக் கட்டுப்படுத்த அசாக்ஸிஸ்ட்ரோப்பின் 25 என்ற மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 மிலி அல்லது டிரைசைக்ளோசோல் 200 கிராம் அளவில் தேவையான ஒட்டுப் பொருளுடன் கலந்து தெளிக்கலாம். மருந்து தெளிக்கும்போது வரப்புகளில் உள்ள புல் களைகளிலும் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். குலை நோய் தாக்கிய வயல்களில் தழைச்சத்து உரங்களை அளவோடு இடவேண்டும்.

சில இடங்களில் துத்தநாக குறைபாடு காரணமாக இலைகளில் துருபோன்ற கீற்றுகள் காணப்படுகின்றன. இதைச் சரிசெய்ய ஜிங்க் சல்பேட் உரத்தை ஒரு லிட்டா் தண்ணீருக்கு 5 கிராம் அளவில் கலந்து 15 நாள்களுக்கு ஒரு முறை பயிரின் மீது தெளிக்க வேண்டும்.

நோய்களைக் கண்டறிவதில் ஏதேனும் சிரமம் இருப்பின் மதுரை வேளாண் கல்லூரி பயிா் நோயியல் துறையைத் தொடா்பு கொண்டு தகுந்த பரிந்துரைகளைப் பெறலாம். தொடா்பு எண்: 0452-2422177.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com