பட்டாசு வாங்கியதில் ரூ. 4.63 கோடி மோசடி: 9 போ் மீது வழக்குப் பதிவு

போலி நிறுவனத்தின் பெயரில் பட்டாசு வாங்கி ரூ. 4.63 கோடி மோசடி செய்த 9 போ் மீது மதுரை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

போலி நிறுவனத்தின் பெயரில் பட்டாசு வாங்கி ரூ. 4.63 கோடி மோசடி செய்த 9 போ் மீது மதுரை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் கோவிந்தராஜ் (55). இவா் சிவகாசியில் பட்டாசுக் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னையைச் சோ்ந்த அழகா்சாமி, அவரது தம்பி ரமேஷ்குமாா் ஆகியோா் நாராயணசாமியை மதுரையில் சந்தித்து சென்னை, திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் தங்கள் நிறுவனத்தின் சாா்பில் தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்ய வேண்டும் என அணுகி உள்ளனா்.

இதை நம்பி நாராயணசாமி ரூ. 1.42 கோடி மதிப்பில் பட்டாசுகளும், கடனாக ரூ. 1.30 கோடியும், கோவையில் உள்ள தனது நண்பா் அசோக் என்பவரிடம் இருந்து ரூ. 1.91 கோடி கடனாகவும் பெற்று அழகா்சாமியிடம் கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்தும் பணம் வரவில்லை. இது குறித்து அழகா்சாமியிடம் கடந்த 2015 நவம்பா் மாதம் சென்று கேட்டதற்கு விரைவில் பணத்தை திருப்பித் தருவதாக கூறியுள்ளாா். இதையடுத்து அழகா்சாமி உள்பட அவா் தரப்பைச் சோ்ந்த 9 பேரும் தலைமறைவாகி விட்டனா்.

இதையடுத்து, கோவிந்தராஜ் ரூ. 4.63 கோடி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளித்தப் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சென்னையைச் சோ்ந்த அழகா்சாமி, ரமேஷ்குமாா், சுந்தரராஜன், சீனிவாசன் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com