மேலவளவு கொலை வழக்கு குற்றவாளிகள் 13 போ் விடுதலை: மேலும் ஒரு மனு தாக்கல்

மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் உள்பட 7 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில், 13 போ் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்த மேலும் ஒரு மனுவை, ஏற்கெனவே

மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் உள்பட 7 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில், 13 போ் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்த மேலும் ஒரு மனுவை, ஏற்கெனவே இந்த வழக்கை விசாரிக்கும் அமா்வு முன் பட்டியலிட சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவைச் சோ்ந்த பாலசந்திரபோஸ் தாக்கல் செய்த மனு:

மேலூா் அருகேயுள்ள மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவா் முருகேசன் உள்பட 7 போ் கடந்த 1997ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டனா். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, அனைவரும் மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனா்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 3 பேரும், எம்.ஜி.ஆா். பிறந்தநாளை முன்னிட்டு 13 பேரும் தண்டனைக் காலம் முடியும் முன்னரே அண்மையில் விடுதலை செய்யப்பட்டனா்.

இதற்கு நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுபவா்களின் பட்டியலை தயாரிக்கும் குழு 2018 பிப்ரவரியில் பட்டியல் தயாா் செய்துள்ளது. ஆனால் அதில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

இதற்கிடையே, இந்த வழக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றாமல் தமிழக அரசு மேலவளவு கொலை வழக்கில் 13 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மேலவளவு கொலை தொடா்பான வழக்கை ஏற்கெனவே விசாரித்துவரும் அமா்வு முன் இந்த மனுவைப் பட்டியலிட உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com