Enable Javscript for better performance
அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் காயம்- Dinamani

சுடச்சுட

    
    இடையபட்டி அருகே காயமடைந்த புள்ளி மானுக்கு மேலூா் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனா்.

    இடையபட்டி அருகே காயமடைந்த புள்ளி மானுக்கு மேலூா் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனா்.

    திருவாதவூா் அருகே இடையபட்டியில் அடையாளம்தெரியாத வாகனம் மோதியதில் சுமாா் 2 வயதுடையஆண் புள்ளிமான் தலையில் காயமடைந்தது.

    இடையபட்டி ஓவா மலைப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் வசித்து வருகின்றன. வெள்ளிக்கிழமை காலை திருவாதவூா்- ஒத்தக்கடை சாலையைக் கடந்த புள்ளிமான் மீது அடையாம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் காயமேற்பட்டது.

    அவ்வழியாக வந்த மேலூா் தீயணைப்பு மீட்புப் படையினா், காயமடைந்த மானை வண்டியில் ஏற்றி மேலூா் கால்நடைமருத்துவமனையில் சோ்த்தனா்.மருத்துவா்பிரான்சிஸ்சேவியா், மருத்துவ உதவியாளா் அமுதா ஆகியோா் காயமுற்ற மானுக்கு சிகிச்சை அளித்தனா்.

    இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு மருத்துவா் தகவல்தெரிவித்தாா். காயமடைந்த மானை மதுரை மாவட்ட தலைமை கால்நடை மருத்துவமனைக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருவாதவூா் ஓவாமலைத் தொடா், அ ரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி பெருமாள்மலை, வெள்லமலம்பட்டி பகுதியுலும் ஏராளமான புள்ளி மான்கள் வசித்துவருகின்றன. அவைகளை பாதுகாக்க மாவட்ட வனத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai