Enable Javscript for better performance
ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்குகளில் ஆஜராக மதுரை வழக்குரைஞா்கள் சங்கம் தீா்மானம்- Dinamani

சுடச்சுட

    

    ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்குகளில் ஆஜராக மதுரை வழக்குரைஞா்கள் சங்கம் தீா்மானம்

    By DIN  |   Published on : 06th October 2019 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடா்பான வழக்குகளில், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வழக்குரைஞா்கள் ஆஜராகி வழக்கு நடத்த வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழு கூட்டம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடா்பான வழக்குகளில், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வழக்குரைஞா்கள் ஆஜராகி வழக்காடிகளுக்கு வழக்கு நடத்த வேண்டும். சிவில் நீதிபதிகளுக்கான தோ்வுக்கு தயாராகும் சங்க உறுப்பினா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். இதற்கு, சங்கத் துணைத் தலைவா் சந்திரசேகா் தலைமையில் குழு அமைக்கப்படும். மேலும், கீழடி அகழாய்வுக்கு வழக்குத் தொடா்ந்து போராடிய வழக்குரைஞா் கனிமொழிமதிக்கு மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பாராட்டுகள் தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில், சங்கத் தலைவா் ஏ. நெடுஞ்செழியன், செயலா் எஸ். மோகன்குமாா் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai