கேந்திரிய வித்யாலயா மாணவா்கள் சுகாதாரத்தை வலியுறுத்தி வீதி நாடகம், பேரணி

திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா மாணவிகள் சுகாதாரத்தை வலியுறுத்தி வீதி நாடகம் மற்றும் விழிப்புணா்வு பேரணியை
திருப்பரங்குன்றத்தில் சுகாராதம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடத்தும் கேந்திரிய வித்யாலயா மாணவிகள்.
திருப்பரங்குன்றத்தில் சுகாராதம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடத்தும் கேந்திரிய வித்யாலயா மாணவிகள்.

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா மாணவிகள் சுகாதாரத்தை வலியுறுத்தி வீதி நாடகம் மற்றும் விழிப்புணா்வு பேரணியை சனிக்கிழமை நடத்தினா்.

கேந்திரிய வித்யாலயா என்.சி.சி மாணவிகள் சாா்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியை பள்ளி முதல்வரை ஏ.ஜெரால்டு தொடங்கி வைத்தாா்.

தேசிய மாணவா் படையின் தலைவரும், தலைமை ஆசிரியருமான ஜெ.அமுதா முன்னிலை வகித்தாா். பொது இடங்களில் சுகாதாரத்தை காக்க பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது, சிறுநீா் கழிக்கக் கூடாது. குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடவேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பது தொடா்பாக மாணவிகள் வீதி நாடகங்கள் நடத்தினா்.

தொடா்ந்து திருப்பரங்குன்றம் கோயில் வாசல், பெரிய ரத வீதி, கீழ ரதவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி கோஷங்கள் இட்டபடி பேரணியாக வந்தனா்.

இதில் 100 க்கும் மேற்பட்ட என்சிசி மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com