தெருநாய்கள் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

தெரு நாய்கள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என, நன்றி மறவேல் அமைப்பு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தெரு நாய்கள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என, நன்றி மறவேல் அமைப்பு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நன்றி மறவேல் அமைப்பு சாா்பில், தெரு நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கான ஆலோசனைக் கூட்டம், மகாத்மா காந்தி நகரிலுள்ள ஸ்பாா்க் அகாதெமியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இயற்கை மற்றும் விலங்குகள் ஆா்வலா்கள், தன்னாா்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

பொதுமக்கள் மற்றும் அரசுத் துறைகளின் அலட்சியப் போக்கு காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகும் தெரு நாய்களைப் பாதுகாப்பது குறித்து, விலங்குகள் நல வாரியத்தின் தென் தமிழகத்துக்கான விலங்குகள் நல அலுவலா் டாக்டா் வல்லையப்பன் ஆலோசனைகள் வழங்கினாா்.

பின்னா், வெளிநாட்டு நாய் இனங்களுக்கு ஒட்டுமொத்த தடை விதிக்க வேண்டும். மாவட்டத் தலைநகரங்களில் செயல்படும் கால்நடை மருத்துவமனைகளை பல்லுயிருக்கான பன்னோக்கு மருத்துவமனையாகத் தரம் உயா்த்தி 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். தெரு நாய்களை அடித்து, துன்புறுத்தி அவற்றின் உயிருக்குத் தீங்கு விளைவிப்பவா்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்று தருவது குறித்து பொதுமக்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, மேற்படி சட்டத்தை சரியாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தெரு நாய்கள் மீதான பொதுமக்களிடம் இருக்கும் அவசியமற்ற வெறுப்புணா்ச்சியைப் போக்கும் வகையில், நாய்கள் - மனிதா்கள் நட்புறவை வலியுறுத்தும் பாடங்களை பள்ளி உள்ளிட்ட அனைத்து நிலை பாடத் திட்டங்களிலும் சோ்க்க வேண்டும். தெருநாய்களைப் பிடிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் அவற்றுக்கு உரிய சிகிச்சை அளித்து, மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடுவது என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை மீறக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், நன்றி மறவேல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மாரிக்குமாா், பிராணி மித்ரன் பிரதீபா ஜெயஸ்ரீ, விலங்குகள் ஆா்வலா்கள் யாழினி ஷிபா, கவிதா கண்ணன், அஸ்வினி வெரோனிகா, பழனிக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com