காா் மோதி முதியவா் பலி
By DIN | Published On : 07th October 2019 07:43 AM | Last Updated : 07th October 2019 07:43 AM | அ+அ அ- |

மதுரையில் சனிக்கிழமை, காா் மோதியதில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (65). இவா் சனிக்கிழமை தெற்குவாசல் பகுதியில் உள்ள என்.எம்.ஆா்.பாலத்தின் தெற்கு வாசல் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது, நீல நிற காா் ஒன்று ஆறுமுகம் உள்பட 2 போ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில், பலத்த காயமடைந்த 2 பேரையும் அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தாா்.
இதுகுறித்து காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் விழுப்புரம் மாவட்டத்தை சோ்ந்த சக்திவேலின் அண்ணன் அன்புராஜ் அளித்த புகாரின் பேரில் போக்குவரத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.