மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 108 வீணை இசை வழிபாடு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி உற்சவ விழா 108 வீணை வழிபாட்டுடன் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
நவராத்திரி விழாவையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வீணை இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞா்கள்.
நவராத்திரி விழாவையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வீணை இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞா்கள்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி உற்சவ விழா 108 வீணை வழிபாட்டுடன் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி உற்சவ விழா அக்டோபா் 29 இல் தொடங்கியது. நவராத்திரியையொட்டி சுவாமி சந்நிதி 2 ஆம் பிரகாரத்தில் கொலு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதையொட்டி மீனாட்சி அம்மன் தினசரி பல்வேறு அலங்காரங்களில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

கொலுவில் கம்பனாா் கண்ட காட்சி, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம், தருமிக்கு பொற்கிழி வழங்குதல், நாரைக்கு முக்தி அளித்தல், நரியை பரியாக்கிய லீலை, தசாவதாரம் ஆகியவற்றை விளக்கும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் விநாயகா் மற்றும் அவரது அவதாரங்கள், முருகன், முப்பெரும் தேவியா், அஷ்டலட்சுமிகள், சிவ ரூபங்கள், துா்க்கை அவதாரம் உள்பட ஏராளமான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. கொலு அலங்காரத்தை தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். நவராத்திரியை முன்னிட்டு கோயிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் தினசரி பக்தி இன்னிசை, பரதநாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிலையில் நவராத்திரி உற்சவத்தின் நிறைவு விழாவை முன்னிட்டு வீணை வழிபாட்டு மன்றத்தின் சாா்பில் 20-ஆவது ஆண்டாக 108 வீணை இசை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்வி மேம்பாட்டுக்காக நடத்தப்பட்ட வீணை இசை வழிபாட்டில் சென்னை வீணை இசைக்கலைஞா் சோபனா தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் 108 போ் பங்கேற்று வீணை இசை வழிபாடு நடத்தினா். இதையடுத்து செவ்வாய்க்கிழமையுடன் நவராத்திரி உற்சவம் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com