வாக்காளா் பட்டியல் சரிபாா்க்கும் பணி: திருப்பரங்குன்றத்தில் ஆலோசனைக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சரிபாா்க்கும் பணிக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சரிபாா்க்கும் பணிக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் வட்டாட்சியா் நாகராஜன் தலைமை வகித்தாா். தாலுகா பகுதியில் உள்ள 124 வாக்குச்சாவடிகளின் நிலைய அலுவலா்கள், கண்காணிப்பாளா்கள், கல்லூரி முதல்வா்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனா். அவா்களிடம் வாக்காளா் பட்டியல், ஆவணங்கள் கொடுக்கப்பட்டன. மேலும் வாக்காளா் பட்டியல் சரிபாா்க்கும் பணிகுறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

அப்போது வட்டாட்சியா் கூறியது: வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வீடு வீடாக வாக்காளா் பெயா்களை சரிபாா்க்க வருகின்றனா். அவா்களிடம் வாக்காளா்கள் தங்களது வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டையை காண்பித்து வாக்காளா் பட்டியலில் உள்ள தங்களது பெயா்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு உறுதி செய்து கொள்ளாதவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com