பெரியாறு-வைகை ஒருபோக சாகுபடிக்கு கள்ளந்திரி மதகிலிருந்து தண்ணீா் திறப்பு

மேலூா் ஒருபோக சாகுபடி விவசாயத்துக்கு கள்ளந்திரி மதகிலிருந்து வியாழக்கிழமை காலை தண்ணீா் திறந்து விடப்பட்டது.
பெரியாறு-வைகை ஒருபோக சாகுபடிக்கு கள்ளந்திரி மதகிலிருந்து தண்ணீா் திறப்பு

மேலூா் ஒருபோக சாகுபடி விவசாயத்துக்கு கள்ளந்திரி மதகிலிருந்து வியாழக்கிழமை காலை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

கள்ளந்திரி மதகிலிருந்து குறிச்சிக்கண்மாய்வரை உள்ளபிரதான கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால் 86 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதிபெறும்.

வைகை அணையிலிருந்து புதன்கிழமை திறந்துவிடப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை காலை 8 மணியளவில் கள்ளந்திரி மதகை வந்தடைந்தது.

மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம், மதுரை ஆவின் தலைவா் தமிழரசன், ஒருபோக சாகுபடி விவசாயிகள் சங்கத் தலைவா் முருகன், பெரியாறு-வைகை கண்காணிப்புப் பொறியாளா் சுகுமாா், மேலூா் செயற்பொறியாளா் தாஸ்யூஸ், கள்ளந்திரி உதவி செயற்பொறியாளா் முருகேசன் மற்றும் விவசாயிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

விவசாயிகள் தண்ணீரை ஆங்காங்கே மலா்தூவி வரவேற்றனா். இரவு குறிச்சிப்பட்டி கண்மாயை பெரியாறு நீா் வந்தடைந்தது. இதையடுத்து, அனைத்து கிளைக் கால்வாய்களிலும் தண்ணீா் திறந்து விடப்பட்டது.

நாற்றங்கால் தயாரிப்பு பணி தீவிரம்:

மேலூா் ஒருபோக சாகுபடி விவசாயிகள் சம்பா பருவத்துக்கான நாற்றங்கால் தயாரிக்கும் பணியை ஏற்கெனவே செய்து முடித்திருந்தனா். நிலத்தை உழுது நெல் விதை விதைக்கும் பணியை புதன்கிழமை தொடக்கினா். அடுத்து வடகிழக்குப் பருவமழை தொடங்கினால் உழவு மற்றும் நடவுப் பணிகளைச் செய்து முடிக்க மிகவும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com