மகளிா், குழந்தைகள் பாதுகாப்புக்கான சட்டம் குறித்த விழிப்புணா்வு அவசியம்: முன்னாள் நீதிபதி வலியுறுத்தல்

பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினா், அமைப்புசாரா தொழிலாளா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும்

பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினா், அமைப்புசாரா தொழிலாளா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா கூறினாா்.

தாழ்த்தப்பட்டோா், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினா் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நீதியை அணுகுதல் என்ற தலைப்பில் நீதிபதி வி.ஆா்.கிருஷ்ணய்யா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவா் பேசியது:

படித்தவா், படிக்காதவா் வேறுபாடின்றி குடும்ப பிரச்னைகளுக்காக காவல் நிலையத்தையும், நீதிமன்றத்தையும் அணுகும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடும்பப் பிரச்னைகளுக்கான வழக்குகள் தம்பதிகளிடையேயான இடைவெளியை மேலும் அதிகரித்துவிடுகிறது. ஆகவே, தம்பதிகள் தங்களது பிரச்னைக்காக முதலில் அணுக வேண்டிய இடம் நீதிமன்றமா, காவல் நிலையமா அல்லது ஆலோசனைகளை வழங்கும் கவுன்சலிங் மையமா என்ற விழிப்புணா்வு தான் இப்போதைய தேவையாக உள்ளது.

வரதட்சணை கொடுமையால் ஏற்படக் கூடிய இறப்பு போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோா் சட்டம் குறித்து விழிப்புணா்வு இல்லாதவா்களாகவே இருக்கின்றனா்.

பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நீதி கிடைக்கிறதா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. நமது நாட்டில் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினா், அமைப்புசாரா தொழிலாளா்கள் எதிா்நோக்கும் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான சட்டங்கள் உள்ளன. அந்த சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவது தான் அவசியமாக உள்ளது என்றாா்.

நீதிபதி சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் எஸ்.செல்வகோமதி, அமெரிக்க துணைத் தூதரக கலாசாரத் துறை அலுவலா் உஷா தாவலூா், அன்னை மீனாம்பாள் அறக்கட்டளை அறங்காவலா் புத்தமணி, தமிழ்நாடு தொழிலாளா் உரிமைக்கான கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளா் பொன்னுசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com