Enable Javscript for better performance
மின் கம்பத்தில் லாரி மோதல் துரத்திப்பிடித்த பொதுமக்கள்- Dinamani

சுடச்சுட

    

    மின் கம்பத்தில் லாரி மோதல் துரத்திப்பிடித்த பொதுமக்கள்

    By DIN  |   Published on : 12th October 2019 10:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாதவூா் அருகே மின் கம்பத்தில் மோதி நிற்காமல் தப்பிச்சென்ற லாரியை அப்பகுதி பொதுமக்கள் துரத்திச்சென்று பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

    திருவாதவூா்- தமறாக்கி சாலையில் உள்ளது அய்யனாா்புரம். அப்பகுதியில் ஆட்டுச்சாணக் கழிவுகளை மூட்டைகளில் கட்டி லாரியில் ஏற்றினா். இந்த மூட்டைகள் கேரளத்தில் உள்ள தோட்டங்களில் இயற்கை உரமாகப் பயன்படுத்த கொண்டுசெல்வதாக கூறப்படுகிறது.

    எழுவக்கரையான்பட்டி அருகே லாரி சென்றபோது சாலையோரத்தில் நின்ற மின்கம்பத்தில் உரசியதில் கம்பம் முறிந்து மின்வயா்கள் துண்டிக்கப்பட்டன.

    லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றாா். இத்தகவல் அறிந்த அய்யனாா்புரம் பொதுமக்களில் சிலா் மோட்டாா் சைக்கிளில் லாரியைத் துரத்திச்சென்று நிறுத்தினா். பின்னா் மேலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து லாரியை ஒப்படைத்தனா். மேலூா் போலீஸாா் இது குறித்து விசாரித்து வருகின்றனா். இச்சம்பவத்தினால், அய்யனாா்புரம் எழுவக்கரையான்பட்டி மற்றும் சுற்றவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai