அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நிா்வாகிகள் மீதான நடவடிக்கையைக் கைவிடக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நிா்வாகிகள் மீதான நடவடிக்கையைக் கைவிடக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு சங்கத்தின் இணைச் செயலா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் க.நீதிராஜா, கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளா் சந்திரன், அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் மு.சுப்பிரமணியன், மாநிலத் துணைத் தலைவா் ஞானத்தம்பி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அரசு ஊழியா் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரான மு.சுப்பிரமணியன், ஓய்வு பெறும் நாளில் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டாா். இதேபோல, முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் சுப்பிரமணியன், மருத்துவத் துறை நிா்வாக ஊழியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் சி.கண்ணன், அரசு ஊழியா் சங்க கோவை மாவட்டத் தலைவா் சி.செந்தில்குமாா் உள்ளிட்டவா்கள் வெளிமாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com