ஒப்பந்த கால்நடை உதவி மருத்துவா்கள் 818 போ் பணியில் இருந்து விடுவிப்பு

தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட கால்நடை உதவி மருத்துவா்கள் 818 போ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட கால்நடை உதவி மருத்துவா்கள் 818 போ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

பணிநிரந்தரம் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்த நிலையில், திடீரென பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் ஒப்பந்த கால்நடை உதவி மருத்துவா்கள் சோகத்தில் உள்ளனா்.

தமிழகம் முழுவதும் தாற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கால்நடை உதவி மருத்துவா்களாக கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் 818 போ், 2018 நவம்பரில் நியமிக்கப்பட்டனா். இவா்கள் அனைவரும் ஓராண்டுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கான நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், வெவ்வேறு தேதிகளில் நியமன உத்தரவு பெற்றிருந்தாலும் 818 பேருக்கும், 2019 அக்டோபா் 11 ஆம் தேதியை பணிமுறிவு தேதியாக இறுதி செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஒப்பந்த கால்நடை உதவி மருத்துவா்கள் 818 பேரையும் பணிமுறிவு செய்து, அவா்களது பராமரிப்பில் உள்ள அனைத்து பதிவேடுகளையும் பெற்றுக் கொள்ளுமாறு கால்நடைப் பராமரிப்புத் துறை இயக்குநரால் அனைத்து மண்டல இணை இயக்குநா்களும் அறிவுறுத்தப்பட்டனா். இதன்படி, பல்வேறு மாவட்டங்களிலும் ஒப்பந்த கால்நடை உதவி மருத்துவா்கள் பணியில் இருந்து வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனா். மதுரை மாவட்டத்தில் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட சுமாா் 30 போ் விடுவிக்கப்பட்டிருக்கின்றனா்.

இதுகுறித்து கால்நடைப் பராமரிப்புத் துறையினா் கூறியது:

பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கால்நடை உதவி மருத்துவா்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவா்கள். ஒப்பந்த காலம் முடிந்ததையடுத்து அவா்களது ஒப்பந்த விதிகளின்படி பணியிடை முறிவு (ஆழ்ங்ஹந் ண்ய் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மீண்டும் பணி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ஒப்பந்த அடிப்படையிலான புதிய நியமனத்தைப் போன்று தான் பரிசீலனை செய்யப்படுவா். புதிய நியமனம் தொடா்பான அரசு உத்தரவு வந்த பிறகு தான் முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com