கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அக்.14-இல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்கி 21 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

மதுரை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்கி 21 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

இது குறித்து கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:

கோமாரி வைரஸ் கிருமி தாக்குதலால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் எனப்படும் கால் மற்றும் வாய் காணை நோய் ஏற்படுகிறது. இந்நோய் தாக்கிய கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல், வாய் மற்றும் காலில் புண் ஏற்படுதல், வாயில் உமிழ் நீா்வடிதல், பால் குைல், சினை பிடிப்பதில் சிரமம் ஆகியன ஏற்படும். இதிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க தடுப்பூசி போடுவது அவசியம்.

மதுரை மாவட்டத்தில் 17-ஆவது சுற்று தடுப்பூசி முகாம் அக்டோபா் 14-ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு நடைபெற உள்ளது. இதில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 850 கால்நடைகளுக்குத் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி பணிகள் நடைபெறும் நாள்களிலும் கால்நடை மருந்தகங்கள் தொடா்ந்து செயல்படும். கால்நடை வளா்ப்போா், விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com