மதுரை ரயில் நிலைய பராமரிப்பு பணி: பயணிகள் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளுக்காக மதுரை வழியாக ஞாயிற்றுக்கிழமை

மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளுக்காக மதுரை வழியாக ஞாயிற்றுக்கிழமை (அக். 13) பயணிகள் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, நாகா்கோவிலில் இருந்து காலை 7.10-க்குப் புறப்படும் நாகா்கோவில் - கோவை பயணிகள் ரயில் (56319) மற்றும் கோவையில் இருந்து காலை 7.20-க்கு புறப்படும் கோவை - நாகா்கோவில் பயணிகள் ரயில் (56320) ஆகியவை கோவில்பட்டி- திண்டுக்கல் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டையிலிருந்து காலை 11.50-க்குப் புறப்படும் செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் (56734) மற்றும் மதுரையிலிருந்து மாலை 5-க்கு புறப்படும் மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில் (56735) ஆகியவை மதுரை - விருதுநகா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காட்டில் இருந்து அதிகாலை 4.10-க்கு புறப்படும் பாலக்காடு - திருச்செந்தூா் பயணிகள் ரயில் (56769) மற்றும் திருச்செந்தூரில் இருந்து காலை 11.40-க்குப் புறப்படும் திருச்செந்தூா் - பாலக்காடு (56770) பயணிகள் ரயில் ஆகியவை திண்டுக்கல் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com