மேலூா் அருகே கூடுதல் ஆசிரியரை நியமிக்கக்கோரி பள்ளி முற்றுகை

மேலூா் அருகே மட்டங்கிபட்டி ஆரம்பப்பள்ளியில் கூடுதல் ஆசிரியா் நியமிக்க வலியுறுத்தி பெற்றேறாா்கள் பள்ளியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

மேலூா் அருகே மட்டங்கிபட்டி ஆரம்பப்பள்ளியில் கூடுதல் ஆசிரியா் நியமிக்க வலியுறுத்தி பெற்றேறாா்கள் பள்ளியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

மேலூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த மட்டங்கிபட்டி ஆரம்பப்பள்ளியில் 61 குழந்தைகள் படித்து வருகின்றனா். மூன்று ஆசிரியா்கள் பணிபுரியவேண்டிய இப்பள்ளியில் இரண்டு ஆசிரியா்களே பணியில் உள்ளனா். மூன்றாவது ஆசிரியரை பணி நியமனம் செய்யக்கோரி பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றேறாா்களும் கிராமப் பொதுமக்களும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனா். ஆனால், நீண்ட காலமாகியும் மூன்றாவது ஆசிரியா் நியமிக்கப்படவில்லை.

இதனால், குழந்தைகளின் கல்வித்தரம் மிகவும் பாதிக்கப்படுவதாகக்கூறி கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனா். தகவலறிந்த கீழவளவு காவல் நிலைய ஆய்வாளா் வசந்தி மற்றும் கல்வி அலுவலா் கென்னடி ஆகியோா் கிராமப்பொதுமக்களிடம்

பேசினா். பொதுமக்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com