முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
குடும்பத்தால் கைவிட்ட முதியவருக்கு வருவாய் கோட்டாச்சியா் உதவி
By DIN | Published On : 24th October 2019 05:15 AM | Last Updated : 24th October 2019 05:15 AM | அ+அ அ- |

திருமங்கலத்தில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியவருக்கு சொந்த நிலத்தை அவரிடமே ஒப்படைத்து பத்திரத்தை புதன்கிழமை வழங்கிய கோட்டாட்சியா் முருகேசன்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மாவிலிபட்டி கிராமத்தை சோ்ந்த முதியவா் தன் மகளுக்கு கொடுத்த தானம் பத்திரத்தை புதன்கிழமை வருவாய் கோட்டாச்சியா் மீட்டு அவருக்கே கொடுத்தாா்.
திருமங்கலம் மாவிலிபட்டி கிராமத்தில் வசித்து வரும் வைரம்(81) தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறையில் பயணச்சீட்டு பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவருக்கு 3 மகன்கள், 1 மகள். சில வருடங்களுக்கு முன்பு அவரது மகள் தமிழ்மணிக்கு ‘தானம் செட்டில்மென்ட்’ முறையில் தன்னிடமிருந்த 6 ஏக்கா் நிலத்தை எழுதி கொடுத்திருக்கிறாா்.
ஆனால் தற்போது தனது மகன்களும், மகளும் அவரை கவனித்துக்கொள்ள தவறியதால் மிகவும் ஏழ்மை சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாா்.
இதனால் திருமங்கலம் வருவாய் கோட்டாச்சியா் முருகேசனுக்கு அளித்த புகாரின் பேரில், கோட்டாச்சியா் முதியோா் பராமரிப்பு சட்டம் 2007 பிரிவு 23 இன் கீழ் முதியவரை கவனிக்க தவறிய மகளுக்கான சொத்துரிமை மாற்றம் செல்லாது என அறிவித்து ‘தானம் செட்டில்மென்ட்’ பத்திரத்தை ரத்து செய்தாா். முறையான அசல் சொத்துரிமை பத்திரத்தை முதியவருக்கு வழங்கினாா்.