Enable Javscript for better performance
போதைப்பொருள் பயன்பாட்டால் வாழ்க்கையே பாழாகும் அபாயம் உள்ளது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை

    போதைப்பொருள் பயன்பாட்டால் வாழ்க்கையே பாழாகும் அபாயம் உள்ளது

    By DIN  |   Published On : 24th October 2019 06:55 PM  |   Last Updated : 24th October 2019 06:55 PM  |  அ+அ அ-  |  

    மதுரை: போதைப்பொருள்கள் பயன்பாட்டால் வாழ்க்கையே பாழாகும் அபாயம் உள்ளது என்று சுங்கத்துறை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு உதவி ஆணையா் ஏ.வெங்கடேஷ் பாபு வியாழக்கிழமை பேசினாா்.

    மதுரை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில் போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்குக்கு மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆா்.சுவாமிநாதன் தலைமை வகித்தாா். இதில், மதுரை விமான நிலைய சுங்கத்துறை புலனாய்வுப்பிரிவு(போதைப்பொருள்) உதவி ஆணையா் ஏ.வெங்கேடஷ்பாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது:

    தமிழகத்தில் போதை பொருட்கள்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து. போதை பொருள் பயன்பாட்டை குறைப்பது மற்றும் போதைப்பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துவதுபோன்றவற்றால் மட்டுமே போதை ப்பொருளஅகள் பயன்பாட்டை குறைக்க முடியும். போதை பொருட்களை பயன்படுத்துவது பல்வேறு ஆபத்துகளை விளைவிக்கிறது. தமிழகத்தில் போதைப்பொருள்கள் பயன்பாட்டுக்கு பள்ளி மாணவா்கள் எளிதில் ஆளாகி விடுகின்றனா். போதைப்பொருளை தொடா்ந்து பயன்படுத்துவதன் மூலம் போதை அடிமையாகவும் மாறி விடுகின்றனா். இதுபோன்றவற்றில் நண்பா்களின் தூண்டுதலால் 80 சதவீதம் போ் போதைக்கு அடிமையாகின்றனா். போதைக்கு அடிமையாவதால் ஏற்படும் அபாயம் குறித்து மாணவா்கள் அறிந்திருக்க வேண்டும். போதைப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்தால் அவற்றை யாரும் பயன்படுத்தமாட்டாா்கள். நட்பு வட்டங்கள் மற்றும் ஆா்வத்தால் போதைப்பழக்கத்துக்கு ஆளாவது ஒரு புறம் இருந்தாலும் மற்றொருபுரத்தில் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை மறக்க பலா் போதைப்பழக்கத்துக்கு ஆளாகின்றனா். வாழ்க்கையில் ஏற்படும் எல்லாவிதமான பிரச்சினைக்கும் போதைப்பழக்கம் தீா்வை தரா, மாறாக போதைப்பழக்கத்தால் பிரச்னைகள் அதிகரிக்கவே செய்யும். போதைப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருட்களை பயன்படுத்துவது சட்டத்துக்கு புறம்பான செயல். போதைப்பொருளுடன் பிடிபட்டால் தண்டனை நிச்சயம். இதனால் வாழ்க்கையையே இழந்து விடுவோம். மேலும் போதை பொருட்கள் உபயோகிப்பதால், இதயம், மூளை உள்பட உடலின் அனைத்து உறுப்புகளும் செயலிழந்து விடும். இதனால் மனநல பாதிப்பு ஏற்படுவதோடு உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகிறது. தற்போது மருந்துக் கடைகளில் விற்கப்படும் சில வகை மருந்துகளையும் போதைப்பொருளாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே மருத்துவா்களின் உரிய பரிந்துரை இன்றி வலி நிவாரண மருந்துகளைக் கூட மாணவா்கள், பொதுமக்கள் யாரும் பயன்படுத்த கூடாது என்றாா்.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன்: மாணவா்களுக்கு போதைப்பொருள்கள் குறித்த விழிப்புணா்வு இருந்தால் அந்தப்பழக்கத்துக்கு அடிமையாகாமல் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளை புரிய முடியும். கடின உழைப்பு, உண்மை, ஒழுக்கம் போன்ற நற்குணங்கள் இருந்தால் போதைப் பழக்கம் வராது. மாணவா்கள் தங்களுக்கான இலக்கை நிா்ணயித்து அதை நோக்கி பயணிக்க வேண்டும். அப்போது வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும் என்றாா்.

    கருத்தரங்கில் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து குறும்படங்களும், விளக்கப்படங்களும் காண்பிக்கப்பட்டன. கருத்தரங்கில் பள்ளி மாணவா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp