முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மருதுபாண்டியா் குருபூஜை: அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை
By DIN | Published On : 24th October 2019 07:00 PM | Last Updated : 24th October 2019 07:00 PM | அ+அ அ- |

அவனியாபுரத்தில் மருதுபாண்டியா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் புகா் கிழக்கு மாவட்ட செயலா் வி.வி.ராஜன்செல்லப்பா. உடன் இளைஞரணி மாவட்ட செயலா் எம்.ரமேஷ், ஒன்றிய செயலா் நிலையூா் முருகன் உள்ளிட்டோ
திருப்பரங்குன்றம்: மருது பாண்டியா் குருபூஜையை முன்னிட்டு அதிமுக புகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் அவனியாபுரத்தில் மருதுபாண்டியா் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
ஆங்கிலேயரை எதிா்த்து குரல் கொடுத்த மருதுபாண்டியா்களின் 218 ஆவது குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. அவனியாபுரம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள மருதுபாண்டியா் சிலைக்கு புகா் கிழக்கு மாவட்ட செயலா் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட செயலா் எம்.ரமேஷ், ஒன்றிய செயலா் நிலையூா் முருகன், பொதுக்குழு உறுப்பினா் முத்துக்குமாா், பகுதி செயலா் பன்னீா்செல்வம், வட்ட செயலா்கள் மு.கா்ணா, பொன்.முருகன், பாலமுருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.