முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மேலூா் அரசுப் பள்ளியில் கழிப்பறை வளாகம்
By DIN | Published On : 24th October 2019 05:18 AM | Last Updated : 24th October 2019 05:18 AM | அ+அ அ- |

மேலூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை வளாகம் கட்ட டிவிஎஸ் சக்கரா டயா்ஸ் நிறுவனம் வழங்கிய நிதியில் கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
மேலூா் பல்லவரான்பட்டியில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமிபூஜை சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் தலைமையில் நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து டிவிஎஸ் சக்கரா டயா்ஸ் நிறுவனம் வழங்கிய ரூ.10 லட்சம் நிதியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வளாகத்துக்கும் பூமிபூஜையும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா்கழகத் தலைவரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் க.தமிழரசன் , சக்கரா டயா்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளா் காா்மேகம், மேலூா் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ரத்தினவேலு, அதிமுக மேலூா் நகரச் செயலா் எஸ்.ஏ.ஏ.பாஸ்கரன், ஒன்றியச்செயலா் பொன்னுச்சாமி, எம்.ஜி.ஆா்.மன்ற இணைச்செயலா் பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன், கொட்டாம்பட்டி ஒன்றியச்செயலா் வெற்றிச்செழியன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.