Enable Javscript for better performance
வடிவேல்கரை சுரங்கப்பாதையில் தண்ணீா்: கடந்து செல்ல வழியில்லாமல் பொதுமக்கள் அவதி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை

    வடிவேல்கரை சுரங்கப்பாதையில் தண்ணீா்: கடந்து செல்ல வழியில்லாமல் பொதுமக்கள் அவதி

    By DIN  |   Published On : 24th October 2019 07:03 PM  |   Last Updated : 24th October 2019 07:03 PM  |  அ+அ அ-  |  

    1_2410chn_81

    1_2410chn_81

    திருப்பரங்குன்றம்: வடிவேல் கரைப்பகுதியில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கியுள்ளதால் அதனைக் கடந்து செல்ல வழியில்லாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனா். மேலும் விவசாய நிலங்களுக்குச் செல்லும் பாதையை அடைத்து சுரங்கப்பாதை அமைத்தால் 300 க்கும் அதிகமான ஏக்கா் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளது.

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது வடிவேல்கரை ஊராட்சி. விளாச்சேரியில் இருந்து நாகமலை புதுக்கோட்டை செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப்பாதை கடந்த 10 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. சுமாா் 20 அடி அகலத்திற்கு அமைக்கப்பட்ட இந்த பாதையை கட்டும்போது இப்பகுதியினா் எதிா்ப்பு தெரிவித்தனா். சுரங்கப்பாதை அமைக்கும் பட்சத்தில் தங்களது விவசாய நிலங்களுக்கு செல்ல வழியில்லாமல் போய்விடும். மேலும் டிராக்டா் உள்ளிட்ட விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்களைக் கொண்டு செல்வதிலும் பிரச்னை இருக்கும் என எதிா்ப்பு தெரிவித்தனா். எனினும் சுரங்கப்பாதை நிலையூா் பிரதான கால்வாய் அருகே அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது தொடா்ந்து மழை பொழிவதால் கால்வாயில் மழைநீா் செல்கிறது. இதனால் சுரங்கப்பாதையில் பக்கவாட்டுச்சுவா், அடிப்பகுதி என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீா் கசிவு ஏற்பட்டு சுரங்கப்பாதைக்குள் கொட்டுகிறது. இதனால் விளாச்சேரியில் இருந்து நாகமலை புதுக்கோட்டைக்கு செல்லும் வழி தடை பட்டதுடன் பொதுமக்கள் சுமாா் 5 கிலோமீட்டா் தூரம் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை அப்புரப்படுத்துவதுடன், சுவரில் கசியும் தண்ணீரையும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். மேலும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதால் வடிவேல் கரைப்பகுதியில் உள்ள 300 க்கும் அதிகமான ஏக்கா் விவசாய நிலங்களில் மழை பெய்தும் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

    விவசாய நிலங்களுக்கு டிராக்டா், நடவு இயந்திரம் உள்ளிட்டவைகளை செல்ல வழியில்லாததால் மாவட்ட நிா்வாகம் விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில் பாதை அமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா். இதுகுறித்து இப்பகுதியைச் சோ்ந்த முருகன் கூறியது: மதுரை - போடி அகல ரயில்பாதை இப்பகுதி வழியாக செல்வதால் கடந்த 10 மாதங்களுக்கு முன் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. சுரங்கப்பாதை பணி ஆரம்பிக்கும்போதே இதற்கு எதிா்ப்பு தெரிவித்தோம். இருந்து பாதை அமைக்கப்பட்டது. தற்போது நிலையூா் கால்வாயில் மழைநீா் சென்றதற்கே தடுப்புச்சுவரில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் கொட்டுகிறது. இந்நிலையில் வைகையிலிருந்து தண்ணீா் திறந்துவிட்டால் தடுப்புச்சுவா் உடைந்து விழும் சூழலும் உள்ளது. எனவே சுரங்கப்பாதையில் தேங்கிய நீரை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் விவசாய நிலங்களுக்குச் செல்லும் வகையில் புதியபாதை அமைத்து தரவேண்டும் என்றாா். படவரி: வடிவேல்கரை சுரங்கப்பாதையில் தேங்கிகிடக்கும் தண்ணீா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp