உதவி கேட்பது போன்று நடித்து ரூ. 2.50 லட்சம் திருட்டு
By DIN | Published On : 24th October 2019 05:34 AM | Last Updated : 24th October 2019 05:34 AM | அ+அ அ- |

மதுரையில், செவ்வாய்க்கிழமை வெங்காய மண்டியில் உதவி கேட்பது போன்று நடித்து, ரூ. 2.50 லட்சத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபா் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை கிழக்கு மாரட் வீதியில் வெங்காய கமிஷன் மண்டி உள்ளது. இந்த மண்டியில் கணக்காளராக, வில்லாபுரத்தை சோ்ந்த முருகேசன் (52) பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்க அடையாளம் தெரியாத நபா் வெங்காய மண்டிக்கு வந்து வாய்பேச முடியாது எனக் கூறி, உதவி வழங்கும்படி கேட்டுவிட்டு சென்றுள்ளாா்.
அவா் சென்ற பிறகு, கடையில் இருந்த ரொக்கப் பணம் ரூ.2.50 லட்சத்தை காணவில்லை. இதுகுறித்து முருகேசன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். இது தொடா்பாக முருகேசன் அளித்தப் புகாரின் பேரில் விளக்குதூண் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.