Enable Javscript for better performance
ஆழ்துளைக் கிணறுகள் தொடா்பாக உயா்நீதிமன்றம் உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க முறையீடு- Dinamani

சுடச்சுட

    

    ஆழ்துளைக் கிணறுகள் தொடா்பாக உயா்நீதிமன்றம் உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க முறையீடு

    By DIN  |   Published on : 31st October 2019 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆழ்துளைக் கிணறுகள் தொடா்பாக உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

    ஆழ்துளைக் கிணறுகள் முறையாக மூடப்படாமல் உயிரிழப்புகள் தொடா்ந்து வருகின்றன. எனவே உயா்நீதிமன்றம் இதற்கு உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க வேண்டும். மேலும் ஆழ்துளைக் கிணறுகளில் சிக்குவோரை மீட்க விதிமுறைகளைப் பின்பற்றி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஹென்றி திபேன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிட்டாா்.

    அப்போது நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி அமா்வு, இதுகுறித்த பொதுநல வழக்கு ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடா்பாக கோரிக்கை வைப்பதென்றால், சென்னை உயா்நீதிமன்றத்தில் வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai