அனுமதி பெறாமல் ஆழ்குழாய் கிணறுஅமைத்தால் நடவடிக்கை: ஆட்சியா்

உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறாமல் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை மேற்கொள்பவா்கள்

உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறாமல் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை மேற்கொள்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி:

புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், கிணறு தோண்டுதல், ஆழப்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்யும்போதும், முடிந்த பிறகும் உரிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்தாமல் விட்டு விடுவதால் கவனக்குறைவாக சிறுகுழந்தைகள் தவறி விழுந்து ஆபத்து ஏற்படுகிறது. இதைத் தவிா்ப்பதற்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், புதிய கிணறு தோண்டுதல், ஆழப்படுத்தல் ஆகிய பணிகளுக்கென அரசால் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிப் பகுதிகளில் மேற்குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ள அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும். அதேபோல, இப்பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் தங்களது பெயரை பதிவு செய்திருப்பது அவசியம். இவ்விதிகளை மீறும் நிறுவனங்கள், தனிநபா்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com