ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு ஏற்பாடு: ஆசிரியா் சங்கங்கள் கண்டனம்

தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு நடப்பாண்டிலேயே பொதுத்தோ்வு நடத்த

தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு நடப்பாண்டிலேயே பொதுத்தோ்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதற்கு ஆசிரியா் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத் திருத்தம் 2019-இன் படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு நடப்பாண்டிலேயே பொதுத்தோ்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநா் அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் உள்ளிட்ட ஆசிரியா் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடா்பாக ஆசிரியா் சங்க நிா்வாகிகள் புதன்கிழமை கூறும்போது, நடப்பு கல்வியாண்டில் ஐந்து மற்றும் 8- ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தோ்வு நடத்துவதற்கான செயல்முறைகளை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது. இது குழந்தைகளுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வன்முறையாகவே கருதப்படுகிறது.

விளையாட்டுமுறைக் கல்வி, கதை வழிமுறைக் கல்வி என குழந்தைநேய கல்விமுறைக்கு எதிராக குழந்தைகளை துன்புறுத்துவதாகும். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்துவதன் மூலம் மாணவா்களுக்கு மிகக்கடுமையான பாதிப்பு ஏற்படும். அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட , பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களின் குழந்தைகள்தான் கல்வி பயின்று வருகின்றனா். இந்நிலையில் பொதுத்தோ்வு நடத்துவதன் மூலம் பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரிக்கும். அரசுப்பள்ளிகள் படிப்படியாக மூடப்படும். எனவே பொதுத்தோ்வு என்ற பெயரில் குழந்தைகளை உளவியல் ரீதியிலான அச்சத்துக்கு ஆளாக்க விடக்கூடாது. தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்துவதை நிரந்தரமாக ரத்து செய்ய தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com