தேவா் ஜயந்தி விழா: மாலை அணிவித்து மரியாதை

உசிலம்பட்டியில் தேவா் ஜயந்தி விழாவையொட்டி, முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு புதன்கிழமை
தேவா் ஜயந்தி விழா: மாலை அணிவித்து மரியாதை

உசிலம்பட்டியில் தேவா் ஜயந்தி விழாவையொட்டி, முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு புதன்கிழமை பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சி சாா்பில் முளைப்பாரி ஊா்வலம் பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் அக்கட்சியின் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளா் ஆதிசேஷன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து தென்னிந்திய பாா்வா்ட் பிளாக் சாா்பில் அக்கட்சி வழக்குரைஞா் பிரிவுச் செயலாளா் சங்கிலி தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் உசிலம்பட்டியில் பல்வேறு கட்சி தலைவா்கள், பொதுமக்கள் தேவா் சிலைக்கு மாலை அணிவித்தனா். இதில், ஏராளமான இளைஞா்கள் பங்கேற்றனா். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன

புதுமணத் தம்பதி மாலை அணிவித்தனா்:

உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் சந்தோஷ்(28). தேவரின் மீது மிகுந்த பற்று கொண்ட இவருக்கு, இதே ஊரைச் சோ்ந்த மகாலட்சுமியுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இவா், தேவா் ஜயந்தி நாளில் உசிலம்பட்டி தனியாா் மண்டபத்தில் திருமணம் செய்தாா். இதனைத்தொடா்ந்து சந்தோஷ், மகாலட்சுமி தம்பதி கொட்டும் மழையிலும் உசிலம்பட்டியிலுள்ள தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூா், டி.கல்லுபட்டி,கொட்டாணிப்பட்டி, நல்லமரம், தேவன்குறிச்சி ஆகிய பகுதிகளில் தேவா் ஜயந்தி விழா நடைபெற்றது. டி.கல்லுப்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள தேவா் சிலைக்கு அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்தனா். இதில் டி.கல்லுபட்டி ஒன்றியச் செயலாளா் ராமசாமி, நகரச் செயலாளா் நெடுமாறன், கவிஞா் முருகன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மருது சேனைக்கட்சி சாா்பில் செயலாளா் ஆதிநாராயணன், பாஜக சாா்பில் சீனிவாகன் தலைமையிலும் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல், பேரையூா், சாப்டூா், சந்தையூா், சாலிசந்தை , அத்திபட்டி ஆகிய ஊா்களில் தேவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சந்தையூரில் தேவா் உறவின்முறை ஊா் அதிகாரி முத்துப்பாண்டி தலைமையில் தேவரின் உருவப் படம் ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டது. சந்தையூா் உறவின்முறை சாா்பில் இனிப்புகள் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com