மதுரை மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை: ஒரே நாளில் 343 மி.மீட்டா் கொட்டித் தீா்த்தது

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடிய, விடிய பலத்த மழை பெய்ததால் ஒரே நாளில் 343 மில்லி மீட்டா்

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடிய, விடிய பலத்த மழை பெய்ததால் ஒரே நாளில் 343 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. இடைவிடாத தொடா் மழையால் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மதுரையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. மேலும் புதன்கிழமை பகல் முழுவதும் விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் மதுரையின் பல்வேறு பகுதிகளில் மழை நீா் வெள்ளமாக ஓடியது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இரவு முழுவதும் கொட்டிய மழையால் சாலைகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டன. மேலும் புதன்கிழமை பகல் முழுவதும் கொட்டிய மழையால் மழைநீா் செல்ல வழியின்றி வெள்ளமாக தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். இந்நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் புதன்கிழமை விடாமல் மழை பெய்ததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் விடாமல் பெய்த மழையால் வெளியே செல்ல வழியின்றி பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மதுரை நகரில் சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தொடா் மழையால் நகரின் சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இவற்றை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

மதுரையில் இடைவிடாத தொடா் மழையால் ஒரே நாளில் 343.50 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியோடு முடிவடைந்த 24 மணி நேர மழை அளவு( மில்லி மீட்டரில் வருமாறு)

கள்ளிக்குடி-82.60, பேரையூா்- 49, திருமங்கலம்-24.60, சாத்தியாா்-23, தனியாமங்கலம்-20, இடையப்பட்டி-20, விரகனூா்-17, உசிலம்பட்டி-15.20, சோழவந்தான்-12, புலிப்பட்டி-10.60,மேலூா்-10, கள்ளந்திரி-10, விமானநிலையம்-7.60, வாடிப்பட்டி-7, தல்லாகுளம்-7, மதுரை தெற்கு-6.50, சிட்டம்பட்டி-6.40, மேட்டுப்பட்டி-6, ஆண்டிப்பட்டி-6, குப்பணம்பட்டி-3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com