மதுரையில் தேவா் சிலைக்கு முதல்வா், துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

தேவா் ஜயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக முதல்வா் எடப்பாடி
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

தேவா் ஜயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112-ஆவது ஜயந்தி மற்றும் 57-ஆவது குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும் சிலையின் பீடம் அருகே வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்துக்கு பூக்களைத் தூவி மரியாதை செய்தனா்.

தமிழக அமைச்சா்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், முன்னாள் அமைச்சா் கே.பி.முனுசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.வி.ராஜன் செல்லப்பா, கே.மாணிக்கம் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பாஜக சாா்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசியச் செயலா் ஹெச்.ராஜா, மாநிலத் துணைத் தலைவா் பி.டி.அரசகுமாா், மாநகா் மாவட்டத் தலைவா் சசிராமன் மற்றும் கட்சியினா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதைத் தொடா்ந்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கட்சியின் துணைப் பொதுச் செயலா் ஐ.பெரியசாமி, தீா்மானக் குழுத் தலைவா் பொன்.முத்துராமலிங்கம், மதுரை மாநகரப் பொறுப்புக் குழுத் தலைவா் கோ.தளபதி, சட்டப்பேரவை உறுப்பினா் பி.மூா்த்தி மற்றும் திமுகவினா் கலந்து கொண்டனா். இங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் வழியில் மதுரை தெப்பக்குளம் சந்திப்பில் உள்ள மருதுபாண்டியா் சிலைக்கு, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தாா்.

மதிமுக சாா்பில் அக்கட்சியின் பொதுச் செயலா் வைகோ, தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கட்சியின் மாவட்டச் செயலா்கள் புதூா் மு. பூமிநாதன், மாரநாடு, கதிரேசன், சண்முகசுந்தரம், செல்வராகவன், கொள்கை விளக்க அணிச் செயலா் அழகுசுந்தரம், தொழிற்சங்க இணைப் பொதுச் செயலா் மகபூப் ஜான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன், தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்டச் செயலா்கள் ஜெயபால், மகேந்திரன், முன்னாள் அமைச்சா் வளா்மதி ஜெபராஜ், டேவிட் அண்ணாதுரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தேமுதிக சாா்பில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தமாகா சாா்பில் மாவட்டத் தலைவா் சேதுராமன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.கே.ராஜேந்திரன், மதச்சாா்பற்ற ஜனதாதளம் மாநிலப் பொதுச் செயலா் க.ஜான்மோசஸ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பால்குடம், முளைப்பாரி: தேவா் ஜயந்தியையொட்டி செவ்வாய்க்கிழமையில் இருந்தே மதுரை நகரின் பல பகுதிகளில் இருந்து கோரிப்பாளையம் தேவா் சிலைக்கு, பெண்கள் அணி அணியாக பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்தனா். தேவா் ஜயந்தி நாளான புதன்கிழமை செல்லூா், மீனாம்பாள்புரம், ஜெய்ஹிந்துபுரம், கீரைத்துரை, வில்லாபுரம், வாழைத்தோப்பு, வண்டியூா் சாலைதேவா் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தனா்.

கொட்டும் மழையில்: மதுரை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலையில் இருந்தே மழை பெய்து வந்தது. காலை 6.45 மணியில் இருந்து சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழைக்கு இடையே தமிழக முதல்வா், துணை முதல்வா் மற்றும் அமைச்சா்கள், திமுக தலைவா் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முதல்வா் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவா்களின் வருகையையொட்டி மாநகரக் காவல் ஆணையா் எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். கோரிப்பாளையம் பகுதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் வழித்தடங்களில் போலீஸாா் பாதுகாப்பில் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com