சுடச்சுட

  

  மதச்சார்பற்ற ஜனதாளம் சார்பில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

  By DIN  |   Published on : 12th September 2019 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரையில் புதன்கிழமை மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் பாரதியார் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
  மதுரையில், தமிழ்நாடு மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாரதி தேசியப் பேரவை  சார்பில் மகாகவி பாரதியார் நினைவு தினத்தையொட்டி சேதுபதி பள்ளி வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி  நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் இருந்த பாரதியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பாரதியார் சிறப்புகள் குறித்து நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பேசினர்.
  மாநில பொதுச் செயலர் க.ஜான்மோசஸ், தொகுதி தலைவர் எம்.ஜெயபிரகாஷ், புறநகர் மாவட்டத் தலைவர் கே.பாக்கியத் தேவர், பொருளாளர் ஜி. நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai