தரமற்ற தார்ச் சாலை: பயன்படுத்தும் முன்பே பாலம் சேதம்

திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குயில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை தரமின்றி பயன்பாட்டுக்கு

திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குயில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை தரமின்றி பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே சேதமடைந்ததாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட செங்கப்படை கிராமத்தில் இருந்து புளியம்பட்டி கிராமத்திற்கு செல்ல சுமார் 20 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டி இருந்தது. இதையடுத்து செங்கப்படை கிராமத்தினரும், புளியம்பட்டி கிராமத்தினரும் இரு கிராமங்களுக்கு இடையே  சேதமடைந்த தார்ச் சாலையை சீரமைத்துத் தரும்படிகோரிக்கை விடுத்தனர். 
அதன் எதிரொலியாக இவ்விரு கிராமங்களுக்கு இடையே பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு தார்ச் சாலை மற்றும் குறுகிய பாலங்கள் அமைக்க ரூ.1 கோடியே 3 லட்சத்து 16 ஆயிரம் ஒதுக்கீடு செய்தது. இப்பணி கடந்த  ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சாலைப்பணிகள் மற்றும் இரண்டு பாலங்கள் கட்டும் பணி நிறைவடைந்து, மூன்றாவது பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய தார்ச் சாலை தரமற்றதாக அமைக்கப்பட்டதாகவும், தற்போது கட்டப்பட்ட புதிய பாலமும் உடைந்து விழுந்து விட்டதாகவும் இப்பகுதி பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.  
இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் கூறியது:
 இந்த சாலை சுமார் 5 ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பின் இந்த சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மழை காலம் ஆரம்பிக்கும் முன்பே சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பாலங்களும் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே   உடைந்து விட்டன. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தரமான தார்ச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com