சுடச்சுட

  

  மாநில அளவிலான பூப்பந்து, வாலிபால் போட்டி:  ஓசிபிஎம் பள்ளி மாணவிகள் தேர்வு

  By DIN  |   Published on : 13th September 2019 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாநில அளவிலான பூப்பந்து, வாலிபால், கோ-கோ விளையாட்டுப் போட்டிகளுக்கு ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  இந்திய பள்ளிகளின் விளையாட்டுக்குழுமம்(எஸ்ஜிஃஎப்ஐ) சார்பில் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி எம்எஸ்ஆர் மெட்ரிக் பள்ளியில் மண்டல அளவிலான பூப்பந்து போட்டிகள் செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெற்றன. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். இதில் 14 வயது பிரிவில் மதுரை ஓசிபிஎம் பள்ளி மாணவிகள் சி.அஸ்கினா, ஜி.சிபிலா, ஜே.ரம்யாஸ்ரீ, பி.காயத்ரி, ஜி.எஸ். சமிதாஸ்ரீ, ஆகியோரும்,  17 வயது பிரிவில் ஏ.மீனாட்சி, டி.காருண்யா, இ.ஆர்.எமிமாள், ஐ.ஹரிணிஆகியோர், 19 வயது பிரிவில் எம்.ஆர்த்தி, எம்.அக்ஷயா, ஜே.ஜாஸ்லின் ஆகியோரும் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
  தேனியில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் 17 வயது பிரிவில் எஸ்.நர்மதா, எஸ்.நன்மதி ஆகியோரும், 19 வயது பிரிவில் வி.எஸ்.சர்மிளாவும் மாநிலப் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். கோ-கோ போட்டியில் 19 வயது பிரிவில் வி.சுவேதா மாநிலப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
   தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை பள்ளித் தாளாளர் ஏ.டேவிட் ஜெபராஜ், தலைமை ஆசிரியை என்.மேரி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்.ராஜேஸ்கண்ணன், பி.சர்மிளா ஆகியோர் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai