சுடச்சுட

  

  வடமலையான் மருத்துவமனையில் "ஹார்ட் ஹீலிங் கிளீனிக்' தொடக்கம்

  By DIN  |   Published on : 13th September 2019 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை வடமலையான் மருத்துவமனையில் "ஹார்ட் ஹீலிங் கிளீனிக்' வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
   இதய செயலிழப்பு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் "ஹார்ட் ஹீலிங் கிளீனிக்'-ஐ மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் வி.புகழகிரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
  இந்நிகழ்ச்சியில் அவர் பேசியது: இதயத் துடிப்பு இருந்தாலும் இதயம் உடலுக்கு ஆக்சிஜனையும், ரத்தத்தையும் தர இயலாத நிலை இதயம் செயலிழப்பு எனப்படுகிறது. இத்தகைய நிலையில் இருப்பவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியம். நோய் நிலை, தொடர் முன்னேற்றம் கண்காணிக்கப்படும். பாதிப்பின் நிலைக்கு ஏற்ப உணவு ஆலோசனை, மருந்துகளின் அளவை சரிசெய்தல் போன்றவை வீட்டிற்கே சென்று மேற்கொள்ளப்படும். இதனால் அடிக்கடி மருத்துவமனைக்கு வரவேண்டிய அவசியம் இருக்காது என்றார்.
  நோய் பாதித்தவரின் ஆயுள் காலத்தை நீட்டிப்பதே "ஹார்ட் ஹீலிங் கிளீனிக்' தொடங்கப்பட்டதன் நோக்கமாகும் என்று சந்திரா புகழகிரி கூறினார்.
  "ஹார்ட் ஹீலிங் கிளீனிக்' தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் டேனி, வடமலையான் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் வி.பாப்புநாதன், இதய மருத்துவர்கள் பி.ஆர்.ஜே.கண்ணன், வி.அசோக்குமார், 
  வி.அமுதன், மயக்கவியல் மருத்துவர் டி.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai