உலகத் தமிழ்ச் சங்க சொற்போர் போட்டி: தியாகராஜர் கல்லூரி மாணவி முதலிடம்

உலகத் தமிழ்ச் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சொற் போர் போட்டியில் தியாகராஜர் கல்லூரி மாணவி முதலிடம் பெற்றார்.

உலகத் தமிழ்ச் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சொற் போர் போட்டியில் தியாகராஜர் கல்லூரி மாணவி முதலிடம் பெற்றார்.
 மதுரை  உலகத் தமிழ்ச் சங்கம், வெற்றி அரசு ஐஏஎஸ் அகாதெமி மற்றும் இளந்தமிழர் இலக்கியப்பேரவை ஆகியவற்றின் சார்பில் "சொற் போர் 2019" மதுரை மண்டலப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. உலகத் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் ப.அன்புச்செழியன் தொடங்கி வைத்தார். நிறைவு விழாவில் தமிழ் வளர்ச்சித்துறையின் முன்னாள் துணை இயக்குநர் க.பசும்பொன் பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார். 
இப்போட்டியில் மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி மாணவி ர.அகிலாண்டேஸ்வரி முதல் பரிசு பெற்றார். இரண்டாம் பரிசை மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சங்கர் ஷர்மா பெற்றார்.  தியாகராசர் கல்வியியல் கல்லூரி மாணவர் கார்த்திக் மூன்றாமிடம் பெற்றார். நிகழ்ச்சியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் சத்தியமூர்த்தி,  பேராசிரியை சங்கரேஸ்வரி,  உலகத் தமிழ்ச்சங்க கண்காணிப்பாளர் ஜ.சபீர்பானு உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com